ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில் தொடங்க திட்ட அறிக்கை வங்கி ரூ.1கோடி செலவில் உருவாக்க அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவிடும் பொருட்டு மாவட்ட வாரியாக தொழில்நுட்ப  பொருளாதார ஆய்வு நடத்தப்பட்டு திட்ட அறிக்கை வங்கி ரூ.1கோடி செலவில் உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டது

அரசாணையில் கூறியதாவது:

தமிழக முதல்வரின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் துவங்க சாதகமாக உள்ள தொழில் திட்டங்களைக் கண்டறிந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவிடும் பொருட்டு மாவட்ட வாரியாக தொழில்நுட்ப  பொருளாதார ஆய்வு (Techno-Economic Survey) நடத்தப்படும். அதன்மூலம், திட்ட அறிக்கை வங்கி (Project Bank) ஒன்று ரூ.1.00 கோடி செலவில் உருவாக்கப்படும்”.

         2. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை புதிய வகை தொழில்களில் ஈடுபடுத்திட உதவிடும் பொருட்டு மாவட்ட வாரியான வருமானம் ஈட்டக்கூடிய தொழில் நுட்ப பொருளாதார ஆய்வினை  மேற்கொண்டு திட்ட அறிக்கை வங்கியினை  (Project Bank) வழிகாட்டு நெறிமுறைகளின்படி உருவாக்க ஏதுவாக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) ஒன்றிய அரசின் (PMAJAY)  SCA to SCP நிதி ஒதுக்கீட்டிலிருந்து செலவிட நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை(நிலை)எண்.90, ஆதி(ம)பந(சிஉதி) துறை, நாள்.10.10.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: