×

நெல்லையில் வாலிபரை காரில் கடத்தி தாக்கிய சம்பவம் வைகுண்டராஜன் உள்ளிட்ட 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

நெல்லை, ஜூன் 22: நெல்லையில், முன்விரோதத்தில் வாலிபரை காரில் கடத்திச் சென்று தாக்கி, வெற்று பேப்பரில் எழுதி வாங்கிய சம்பவத்தை தொடர்ந்து  விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் உள்ளிட்ட 4 பேர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் வைகுண்டராஜன் (67), இவரது தம்பி ஜெகதீசன் (62) ஆகியோர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் தொழிற்சாலைகள் மற்றும் பல நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வைகுண்டராஜனுக்கும், ஜெகதீசனுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக வழக்குகள் நடந்து வருகிறது. தொழில் போட்டி மற்றும் சொத்து தகராறு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவரை தங்களது ஆதரவாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் கண்காணித்து வருவதாக இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டியும் காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-11-2020ம் தேதியன்று மாலையில் தூத்துக்குடி சங்கரப்பேரியை சேர்ந்தவரும், தனியார் நிறுவன ஊழியருமான முத்துகண்ணன் (27) பாளையங்ேகாட்டை கேடிசி நகர் நான்கு வழிச்சாலை அருகே பைக்கில் வந்து ெகாண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த சிலர் பைக்கை வழிமறித்து முத்துகண்ணனை மிரட்டி காரில் கடத்தி சென்று அவரை கையாலும், கம்பாலும் தாக்கி, மிரட்டி வெற்று பேப்பரில் எழுதி வாங்கிவிட்டு விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 18-11-2020ம் தேதியன்று இரவு முத்துகண்ணன் புகார் அளித்தும், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டி நெல்லை நீதிமன்றத்தில் முத்துகண்ணன் மனு அளித்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முத்துகண்ணனை காரில் கடத்தி தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. இதுகுறித்து பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ அருணாசலம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் மகாராஜன், சுடலைகண்ணு, விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் (67), ராஜன் (70) ஆகிய 4 பேர் மீது ஆள் கடத்தல், கம்பால் தாக்குதல், அசிங்கமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்….

The post நெல்லையில் வாலிபரை காரில் கடத்தி தாக்கிய சம்பவம் வைகுண்டராஜன் உள்ளிட்ட 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nelly ,Vaikundarajan ,Paddy ,Nelli ,Nelly Vaikuntarajan ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...