கர்நாடகாவில் பரபரப்பு: இருசக்கர வாகனத்தில் சென்றவரை விரட்டி தாக்கிய சிறுத்தை புலி..பொதுமக்கள் அலறல்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் சிறுத்தை புலி தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். கே.ஆர். நகர் பகுதிக்குள் மக்கள் சாலையில் நடந்து சென்றபோது அங்கு சிறுத்தை புலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் சத்தம் எழுப்பியதால் வழியில் தென்பட்டவர்களை சிறுத்தைப்புலி தாக்க தொடங்கியது. ஒருசிலர் வீட்டு சுவரில் ஏறி மொட்டை மாடிக்கு சென்று தப்பினர்.

அதேநேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை சிறுத்தை புலி தாக்கியது. பொதுமக்கள் விரட்டி சென்றபோது அந்த புலி தப்பி சென்றது. தகவல் கிடைத்த வனத்துறையினர் தீயணைப்புத்துறை உதவியுடன் சிறுத்தை புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை பத்திரமாக மீட்டு சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

Related Stories: