நவம்பர் 6-ம் தேதி கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: நவம்பர் 6-ம் தேதி கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார். காவல்துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நவம்பர் 6-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் பல்வேறு இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாக கடந்த முறை விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தை குறிப்பிட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ள காரணத்தால் தமிழகத்தல் 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 24 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி வலிக்க இயலாது என்றும், 23 இடங்களை பொறுத்த வரையில்உள் அரங்க கூட்டமாக நடத்திக்கொள்ளலாம் என்றும் அதற்க்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கான காரண காரியங்களை விளக்கி அதற்கான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து இன்றைக்கு  இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கையை ஆய்வு செய்ததாக தெரிவித்த நீதிபதி அந்த அறிக்கையில் 6 இடங்களை தவிர (கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், அருமனைதிருப்பூர் மாவட்டத்தில் பல்லடம்) மற்ற இடங்களில் எந்த பிரச்சனையும் இல்லை.

பழைய வழக்குகளை சுட்டிக்காட்டி அணி வகுப்பும் அனுமதி மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிக்கையை ஏற்க முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். அந்த 6 இடங்களை தவிர மீதமுள்ள 44 இடங்களிலும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பிறப்பித்த விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: