×

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.

* சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 853 மில்லியன் கன அடி. மழையின் காரணமாக வரத்து கால்வாய்கள் மூலமாக 650 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் மற்றும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 650 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.   
* புழல் ஏரியில் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 2763  மில்லியன் கனஅடி. நீர்வரத்து 1310 கன அடி‌. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 292 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
* சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 258 மில்லியன் கனஅடி. நீர்வரத்து 211 கன‌அடி.
* செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. தண்ணீர் இருப்பு 2850 மில்லியன் கனஅடி. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர் மற்றும் மழைநீர் என 642 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 260 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
* கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தற்போது முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

Tags : Thiruvallur ,Chennai , Drinking water for the people of Tiruvallur, Kanamaha, Chennai, Rapid rise in the water level of lakes
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...