×

குங்பூ சாதனையாளர்களுக்கு விருது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

மாமல்லபுரம்: மஞ்சூரியா குங்பூ தற்காப்பு கலையில், போதி தர்மரின் நிகழ்கால அடையாளமாக திகழ்ந்த கிராண்ட் மாஸ்டர் சேகரின் 8ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் போதி தர்மர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன் மாமல்லபுரம் அருகே வடகடம்பாடி கிராமத்தில் நடைபெற்றது. மஞ்சூரியா தற்காப்பு கலையின் தலைவரும், மதிமுக துணை பொது செயலாளருமான மல்லை சத்யா தலைமை தாங்கினார். செயலாளர் மாஸ்டர் அசோக்குமார் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எழும்பூர் குற்றவியல் நீதிபதி பார்த்திபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாஸ்டர் சேகரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் குங்பூ தற்காப்பு நிலையில் சிறந்து விளங்கிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு போதி தர்மர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.

 அமைச்சரிடம் மஞ்சூரியா குங்பூ தற்காப்பு கலையை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளில் கட்டாய பயிற்சி அளிக்க வேண்டும் என மல்லை சத்யா வலியுறுத்தினார். இதுகுறித்து தமிழக முதல்வர், விளையாட்டு துறை அமைச்சரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி தெரிவித்தார்.

Tags : Minister ,T. Moe Andarasan , Kung Fu Achievers Award, Minister Thamo Anparasan,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...