×

கன்னியாகுமரியில் சிஐடியு மாநில மாநாடு

கன்னியாகுமரி: இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 15வது மாநாடு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் 4 நாள்கள் நடக்கும் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வாக காந்தி மண்டபம் அருகே நினைவுச்சுடர் சங்கமம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு மாநாடு வரவேற்புக்குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஐடா ஹெலன் வரவேற்றார். சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார், திரைப்பட நடிகை ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சவுந்தரராஜன், நூர்முகமது, லீமாரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று 2வது நாளாக காலை 9 மணிக்கு மாநாடு தொடக்க நிகழ்ச்சியாக கட்சி கொடியை தொழிற்சங்க மூத்த தலைவர் ரங்கராஜன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தியாகிகள் சுடர் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து காலை 10 மணிக்கு பொது மாநாடு தொடங்கியது. சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் செலஸ்டின் வரவேற்றார்.

அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சன் தொடக்க உரையாற்றினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி, தமிழ்நாடு எஐடியுசி பொதுச்செயலாளர் மூர்த்தி, எச்எம்எஸ் பொதுச்செயலாளர் சுப்ரமணியன், ஐஎன்டியுசி செயல்தலைவர் கதிர்வேல், ஏஐயுடியுசி பொதுச்செயலாளர் சிவகுமார், ஏஐசிசிடியு தமிழ்நாடு மாநில குழு தலைவர் சந்திர பாண்டியன் பேசினர். தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு மேல் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.


Tags : CID State Conference ,Kannyakumari , Kanyakumari, CITU, State Conference
× RELATED பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான...