டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: இகா ஸ்வியாடெக் 2வது வெற்றி

போர்ட் வொர்த்: டாப் 8 டென்னிஸ் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் அமெரிக்காவின் போர்ட் வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் தலா 4 வீராங்கனைகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் மோதுகின்றனர். இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர். டிரேசின் ஆண்டின் பிரிவில் இன்று நடந்த போட்டியில், நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரான்சின் கரோலின் கார்சியாவுடன் மோதினார்.

இதில், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் வெற்றிபெற்றார். முதல் போட்டியில், டாரியா கசட்கினாவை வீழ்த்திய அவருக்கு இது 2வது வெற்றியாகும். இதன்மூலம் அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில், அமெரிக்காவின் கோகோ காப், ரஷ்யாவின் டாரியா கசட்கினா மோதினர். இதில் கசட்கினா 7-6, 6-3 என முதல் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2 தோல்வி அடைந்த கோகா காப் அரையிறுதி வாய்ப்பை இழந்தார். நாளை மறுநாள் கசட்கினா-கார்சியா மோதுகின்றனர். இதில் வெற்றிபெறுபவர் 2வது வீராங்கனையான அரையிறுதி வாய்ப்பை பெறுவார்.

Related Stories: