×

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இன்று 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு:

11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கையில் மிக கனமழை பெய்யக்கூடும்.

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

நாளை 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் நாளை 15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு :

நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Tags : Nilgiris ,Coimbatore ,Tirupur ,Tamil Nadu ,Chennai Meteorological Center , Nilgiris, Coimbatore, very heavy rain, Chennai weather
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...