×

அதிமுக தலைமையை விமர்சித்ததால் ஆத்திரம் சசிகலாவுடன் போனில் பேசியவர் கார் பெட்ேரால் ஊற்றி எரிப்பு: பரமக்குடியில் நள்ளிரவில் பரபரப்பு

பரமக்குடி: அதிமுக தலைமை, முன்னாள் அமைச்சர் ஆகியோரை விமர்சித்த சசிகலா ஆதரவாளரின் கார் நள்ளிரவில் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி காமராஜர் நகரை சேர்ந்த கான்ட்ராக்டர் வின்சென்ட் ராஜா. அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடன், சசிகலா செல்போனில் பேசிய ஆடியோ வெளியானது. இதனால் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர். இதற்கிடையே பரமக்குடி அருகே காவனூரில் உள்ள தனது தார் பிளான்ட்டில் வின்சென்ட் ராஜா நேற்று முன்தினம் தங்கியுள்ளார். நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், வெளியே வராமல் சிசிடிவி கேமராக்களை பார்த்துள்ளார். அப்போது வெளியில் நிறுத்தியிருந்த தனது கார்  தீ பிடித்து  எரிந்ததை  பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இரவுநேர ரோந்து போலீசார் சென்று பார்வையிட்டனர்.  தீயணைப்பு துறையினர் வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பாார்த்தபோது இரு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து, காரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பதிவாகி இருந்தது. அதன்படி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர், சசிகலா ஆதரவாளர் சோமாத்தூர் சுப்பிரமணியன் உள்பட பலர் வின்சென்ட் ராஜாவிற்கு ஆறுதல் கூறினர்.வின்சென்ட் ராஜா கூறுகையில், ‘‘நான் சசிகலாவுடன் செல்போனில் பேசியதிலிருந்து எனக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன. தற்போது நேரடியாக என்னை கொலை செய்ய திட்டமிட்டு இங்கு வந்துள்ளனர். வெளியில் நிறுத்தியிருந்த காரில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர். அதிமுக தலைமை மற்றும் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோரை விமர்சனம் செய்ததால், அரசியல் காழ்ப்புணர்ச்சியில்  இதை செய்துள்ளனர்.  எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் இறுதியில் அதிமுக சசிகலா கைக்குள் தான் செல்லும். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என்றார்.பரமக்குடி, ஜூன் 22: அதிமுக தலைமை, முன்னாள் அமைச்சர் ஆகியோரை விமர்சித்த சசிகலா ஆதரவாளரின் கார் நள்ளிரவில் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி காமராஜர் நகரை சேர்ந்த கான்ட்ராக்டர் வின்சென்ட் ராஜா. அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடன், சசிகலா செல்போனில் பேசிய ஆடியோ வெளியானது. இதனால் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர். இதற்கிடையே பரமக்குடி அருகே காவனூரில் உள்ள தனது தார் பிளான்ட்டில் வின்சென்ட் ராஜா நேற்று முன்தினம் தங்கியுள்ளார். நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், வெளியே வராமல் சிசிடிவி கேமராக்களை பார்த்துள்ளார். அப்போது வெளியில் நிறுத்தியிருந்த தனது கார்  தீ பிடித்து  எரிந்ததை  பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இரவுநேர ரோந்து போலீசார் சென்று பார்வையிட்டனர். தீயணைப்பு துறையினர் வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பாார்த்தபோது இரு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து, காரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பதிவாகி இருந்தது. அதன்படி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர், சசிகலா ஆதரவாளர் சோமாத்தூர் சுப்பிரமணியன் உள்பட பலர் வின்சென்ட் ராஜாவிற்கு ஆறுதல் கூறினர்.வின்சென்ட் ராஜா கூறுகையில், ‘‘நான் சசிகலாவுடன் செல்போனில் பேசியதிலிருந்து எனக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன. தற்போது நேரடியாக என்னை கொலை செய்ய திட்டமிட்டு இங்கு வந்துள்ளனர். வெளியில் நிறுத்தியிருந்த காரில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர். அதிமுக தலைமை மற்றும் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோரை விமர்சனம் செய்ததால், அரசியல் காழ்ப்புணர்ச்சியில்  இதை செய்துள்ளனர்.  எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் இறுதியில் அதிமுக சசிகலா கைக்குள் தான் செல்லும். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என்றார்….

The post அதிமுக தலைமையை விமர்சித்ததால் ஆத்திரம் சசிகலாவுடன் போனில் பேசியவர் கார் பெட்ேரால் ஊற்றி எரிப்பு: பரமக்குடியில் நள்ளிரவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Athram Sasikala ,AIADMK ,Riot ,Paramakudi ,Sasikala ,Paramakkudi ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...