பாசிச ஆட்சி தொடர்ந்து நடந்தால் நாடாளுமன்றம் இருக்கும் ஜனநாயகம் இருக்காது: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

மன்னார்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய “மகாத்மா மண்ணில் மதவெறி” என்ற நூலின் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடந்தது. ஜி.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கி பேசியதாவது: இந்துத்துவம் எனும் பாசிசத்தின் ஆட்சி தொடர்ந்து நடந்தால் நாடாளுமன்றம் என்ற கட்டிடம் மட்டும் தான் இனி இருக்கும். ஜனநாயகம் என்பது இருக்காது.

சர்வாதிகார ஆட்சி தான் நாட்டில் நடக்கும். இந்தியாவின் பன்முக தன்மையை இந்துத்துவம் சிதைக்கும். மதசார்பின்மை இருக்காது. பாடுபட்டு உருவாக்கப்பட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்த்து வருவதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமையாக ஒன்றிய அரசு இருந்து வருகிறது. ஒன்றியஅரசின் இத்தகைய மக்கள், தொழிலாளர், விவசாய விரோதபோக்கிற்கு மிக விரைவில் முடிவு கட்டப்படும் என்று பேசினார்.

Related Stories: