×

முழுக்க முழுக்க வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பாக்கெட் பால் மட்டுமே விலை உயர்வு; பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் நாசர் விளக்கம்

சென்னை: முழுக்க முழுக்க வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் விற்பனை விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார். ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை சில்லறை விற்பனையில் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு ரூ.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.46க்கே விற்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலை உயர்வை ஈடுசெய்ய ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பால் கொள்முதல் விலை உயர்வு அமல் குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வால் 4,20,000 பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32ல் இருந்து ரூ.35-ஆக உயர்ந்துள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41லிருந்து ரூ.44-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமும் இன்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.48 மட்டுமே புதுப்பிக்கப்படும்.

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஃபுல் கிரீம் பால் ( ஆரஞ்சு நிற ஆவின் பால்) விலை, 60-ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விலை மாற்றத்திற்குப் பிறகும், ஆவின் நிறைகொழுப்பு பால் விலை, தனியாரோடு ஒப்பிடுகையில் ரூ.24 வரையில் குறைந்துள்ளது. ஆவின் அட்டை மூலம் ஆரஞ்ச் பால் வாங்குவோர் எண்ணிக்கை 11 லட்சம் பேர் ஆகும். பாஜக ஆளும் குஜராத், கர்நாடகத்தை விட தமிழ்நாட்டில் பால் விலை ரூ.10 குறைவாக உள்ளது. மற்ற 2 வகையான பால் விலையில் மாற்றமில்லை என தெரிவித்தார்.

Tags : Minister ,Nasser , A's milk procurement, milk producers, Minister Nasser
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு