×

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், ஊட்டச்சத்து தரும் இயற்கை காய்கறி மாடித்தோட்டம்-அரவக்குறிச்சியில் அரசு கிட் வழங்க கோரிக்கை

அரவக்குறிச்சி : தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், ஊட்டச்சத்து தரும் இயற்கை காய்கறி மாடித்தோட்டம் அமைக்க அரவக்குறிச்சியில் அரசு கிட் வழங்க கோரிக்கை வழங்கப்பட்டது.
மாடிப் பகுதிகளில் மாடித்தோட்டம் அமைத்து இயற்கையான முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட வைகளை அறுவடை செய்வதில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்து, உண்ப தில் கிடைக்கும் ஆனத்தம் அலாதியானது. வீட்டில் நாம் சாப்பிடும் காய்றிகள், பழங்கள் கீரைகள் எல்லாம் பெரும் பான்மை கடைகளில் இருந்தே வாங்கி பயன்படுத்துகிறோம். இவைகளில் ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது இயற்கை மீதான விழிப்புணர்வு பொது மக்களிடையே அதிகரித் திருப்பதால் இந்த மாடித் தோட்டம் அமைப்பதன் மீது ஆர்வத்தை தந்திருக்கிறது. மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் என்பது இயற்கை உரம், இயற்கை நுண்ணுயிர் உரம், இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் மூலம் வீட்டின் மாடி மற்றும் வீட்டை சுற்றி உள்ள பயன்படுத்தப்படாத பகுதிகளில் காய்கறிகள். பழங்கள், மூலிகை பயிர்களை நட்டு, நஞ்சில்லா மற்றும் சத்தான உணவு பொருட் களை தாமே அறுவடை செய்து பயன்படுத்துவது ஆகும்.

நாளுக்கு நாள் காய்கறிகளின் விலை ஏற்றத்தினால் மாடித்தோட்டம் மூலம் அந்த செலவை குறைக்கலாம். நம் உடலுக்கு தேவையான சத்துக்களை மாடித்தோட்ட காய்கறிகள் தருகின்றது. நஞ்சில்லா காய்கறி பொருளை நாமே அறுவடை செய்யலாம். இதனால் வரவேற்பு அதிகமாகி மாடித் தோட்டம் அமைக்கும் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்ட திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கான ரூ.900 மதிப்புள்ள கிட், 50 சதவீத மானியத்தில் ரூ.450க்கு தோட்டக்கலை மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. இத்திட் டத்திற்கு பொதுமக்கள். இயற்கை ஆர்வலர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.

நிலவேம்பு விஷக்கடி, சாய்ச்சல் நீரிழிவு பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது. தூதுவளை, ஆடாதொடா இலைகள் வளர்க்கலாம். மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம் மூலிகை பயிர்கள் நம் வீட்டின் மருத்துவராக செயல்படும் சோற்று கத்தாழை, உடல் வெப்பம் அகற்றி சருமந்தை பாதுகாக்கிறது. காய்ச்சல், சளியை கட்டுப்படுத்தும் இவற்றில் பூச்சி தாக்குதல் அதிகமிருக்காது. எனவே இவற்றை பயிரிடலாம். இவ்வகையில் பொன்னாங்கண்னி, அகத்தி கீனர, சிறுகீரை, தண்டு கீரை, பலக்கீரை, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, மணத்தக்காளி போன்றவை சிறந்தது.

முதலில் காய்கறி தோட்டம் அமைப்பவர்கள். தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறி சாகுபடியில் இறங்கவேண்டாம். இவற்றில் நோய் தாக்குதல் அதிகமாக இருக் கும். எனவே ஆரம்பத்தில் இவற்றை பயிரிடுவதற்கு பதிலாக கொடி, கீரை மற்றும் மூலிகை வகைகளை குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடியவற்றை நடவு செய்யலாம். கீரை வகைகளை 25 நாட்களில் முழுவதுமாக அறுவடை செய்து விடலாம். மாடித்தோட்ட பராமரித்தல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது.

வீட்டின் மருத்துவரா மாடி தோட்டம் உள்ளது. மாடித் தோட்டத்தில் புடலை, பாகற்காய், சரைக்காய், பீர்க்கங்காய் பூசணி வெள்ளரி போன்ற கொடி வகை வளர்க்கலாம் என்று அனுபவமிக்க மாடித் தோட்ட ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் திட்டத்தில் வழங்கும் ஒரு கிட்டில் செடி வளர்க்கும் 6 வளர் பைகள். (தென்னை நார்கழிவு கட்டிகள், 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைகோடெர்மா விரிடி போன்ற இயற்கை இடுபொருட்களுடன், வேப்ப எண்ணெய், மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு முறைக்கான விளக்கங்கள் வேளாண் துறை மூலம் வழங்கபடுகிறது.

மாடிதோட்ட ஆர்வலர்களுக்கு இவ்வளவு பயன்மிக்க முதலமைச் திட்டம்சரின் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்ட திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கான விதைகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் அரவக்குறிச்சி வட்டத்தில் வழங்கப் படுவதில்லை. எனவே, முதலமைச் திட்டம்சரின் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்ட திட்டத் தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கான விதைகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் அரவக்குறிச்சி வட்டத்தில் வழங்க நடவடிக்க எடுத்த வேண்டுமென்று வேளாண் துறைக்கு மாடித் தோட்ட இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Aravakurichi , Aravakurichi: On the order of the Chief Minister of Tamil Nadu, a request was made to provide a government kit in Aravakurichi to set up a nutritious organic vegetable garden.
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...