×

முத்துப்பேட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதியிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

*இதுவரை 6 நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளது

*பொதுமக்கள் மகிழ்ச்சி

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் வறட்சியான காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிர்வாக பட்டியலில்படி நூறு குளங்கள் உள்ளன.

இதனை சென்ற ஆண்டுகளில் முறையாக பராமரிக்காததால் ஆக்கிரமிப்பில் மாயமானதுபோக பட்டியலில் 43 குளங்கள் இருந்தாலும் கண்ணில் தெரிவது 10க்கும் மேற்பட்ட குளங்கள்தான். கடந்த ஆண்டுகளில் முத்துப்பேட்டை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் தற்பொழுது முத்துப்பேட்டைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோக்கபட்டலும் அதிலும் வரும்வழியில் குளறுபடி அடிக்கடி ஏற்படுவதால் இந்த குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமாகவும் உள்ளது.

இந்தநிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்குகாடு, செம்படவன்காடு, மருதங்காவெளி ஆகிய பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று 3 பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2013-14ம் ஆண்டில் அமைக்கப்பட்டு பயனுக்கு வந்தது. வறட்சி நிவாரண திட்ட நிதியில் தலா ரூ.6 லட்சம் வீதம் மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கபட்டு அப்போதைக்கு பயனுக்கு வந்த மூன்று கட்டடத்திலும் பிளாஸ்டிக் டேங்க், பில்டர் மற்றும் மின்மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அருகேயே போர்வெல்லும் அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சி சுத்திகரித்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதற்காக தனித் தனி பம்ப் ஆபரேட்டர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் இந்த பணியில் ஆர்வம் இல்லாததால் இந்த மூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் பணியாளர்களின் அலட்சியத்தால் கடந்த ஆட்சியில் பயன்பாட்டில் இல்லாமல் வீணாகி வந்தது. இந்தநிலையில் தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திறம்பட செயல்படும் பணிகளை கண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முத்துப்பேட்டை பேரூராட்சியை திமுக கைப்பற்றி திறம்பட செயலாற்றி வருகிறது. இதில் குறிப்பாக குடிநீர் பிரச்சனையை துரிதமாக எடுத்து வரும் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாதளவில் கொண்டு வரவேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதல் கட்டமாக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த தெற்குகாடு, செம்படவன்காடு, மருதங்காவெளி ஆகிய பகுதியில் இருந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என ஆய்வு செய்து சமீபத்தில் தெற்குக்காடு மாரியம்மன் கோவில் அருகே ஒன்றும், அதே பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் இருக்கும் ஒன்றும், பேட்டை அங்காளம்மன் கோவில் அருகே ஒன்றும் என மூன்று குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்ற பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்து அப்பகுதி மக்கள் தேவையை கருதி முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசல் எதிர்புறம் ஒன்றும், அதேபோல் பேட்டை மகிழம்பூ மரம் அருகே ஒன்றும், பேட்டை காமெண்டியடி அருகே ஒன்றும் என மூன்று குடிநீர்சுத்திகரிப்பு நிலையங்கள் தலா ரூ.11 லட்சத்தில் அடிக்கல் நடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து பேரூராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார் ஆகியோர் கூறுகையில்,தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான பொற்கால ஆட்சி தற்போது நடந்து வருகிறது. தமிழக முதல்வரின் உறுதுணையுடன் இன்று முத்துப்பேட்டை பேரூராட்சியில் பலகோடி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக வறட்சியான நேரத்தில் தட்டுப்பாடு இல்லாமல் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கொள்ளிடம் கூட்டு குடிநீரை சீராக வழங்கி வருவதுடன் இன்று அனைத்து பகுதியிலும் கூடுதலாக குடிநீர்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து மக்கள் சேவையாற்றி வருகிறோம். இது எங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Tags : Muthupapet Purchasi , Muthupettai: In Muthupettai Municipal Corporation, additional drinking water will be provided to meet the shortage of drinking water during dry season in all areas.
× RELATED 61 வயதில் நீட் எழுதிய மாஜி வங்கி அதிகாரி