×

மதுரை மாவட்டம் மேல்பட்டி கிராமத்தில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளால் பாதிப்பு: மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து விடுவதாக வேதனை

மதுரை : மதுரை மாவட்டம் மேல்பட்டி கிராமத்தில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளால் மழைநீர் அருகே உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலப்பட்டி கிராமத்தில் ஆண்மையில் பெய்த கனமழையால் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளால் அருகே உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புகுந்து அச்சுறுத்துவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பேரையூர் பேரூராட்சியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றமால் அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதான் ஒவ்வொரு முறையும் மழைக்காலத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   


Tags : Melpatti ,Madurai , Madurai, Stream, Occupy, Home, Impact, Rainwater, Agony
× RELATED அடையாளம் தெரியாததால் மூதாட்டியின்...