தூய்மை பாரத திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெற்றது காரைக்குடி அஞ்சலகம்

மதுரை :  தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ‘சிறப்பு தூய்மை வார முகாம் 2.0’ மூலம் ஆர்எம்எஸ் மதுரை கோட்டத்தின் கீழ் இயங்கும் காரைக்குடி அஞ்சல் பிரிப்பக அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

இதுகுறித்து ஆர்.எம்.எஸ் மதுரை கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஜவகர்ராஜ் கூறும்போது, ‘‘காரைக்குடி அஞ்சல் பிரிப்பக அலுவலகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது. அரசு அலுவலகங்கள் என்றாலே சுத்தம் இன்றி காணப்படும் எனும் கருத்தை மாற்றும் விதமாக மதுரை கோட்ட தபால் அலுவலகங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தூய்மை பணியில் முன்னோடியாக இருக்கிறது.

இதில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள காரைக்குடி தபால் அலுவலக கட்டிடம் சீரமைப்புடன், புதுவண்ண பூச்சுடன் பொலிவூட்டப்பட்டிருக்கிறது. வளாகத்தில் இருந்த முட்புதர்கள் அகற்றி, மரக்கன்று நட்டு, பூங்காவும் அழகுற அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரவு நேரம் முழுவதும் பதிவு, விரைவு, பார்சல் தபால் என அனைத்து தபால்களும் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தபால் சேவை வசதியை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories: