தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர்,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 4 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (04-11-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Related Stories: