தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்ப பெற வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தேயிலை தோட்டக் கழகத்திற்கு சொந்தமான, தேயிலை பயிரிடப்பட்ட நிலங்களை வனத்துறைக்கு மாற்ற ஆணை வெளியிட்டுள்ள நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கூட இல்லாத நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட டான்டீ நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்புகளை காலி செய்தால்தான் அவர்களது ஓய்வு கால பலன்கள் வழங்கப்படும் என்று நிர்வாகம் தற்போது நோட்டீஸ் வழங்கியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

Related Stories: