×

5ம் தேதி சென்னை, புதுவையில் பாஸ்போர்ட் அலுவலகம் திறந்திருக்கும்: மண்டல அதிகாரி கோவேந்தன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:  காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கான நாள் அதிகரித்து வருவதால், அதன் தேவைக்கு ஏற்ப, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் (சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் மற்றும் புதுச்சேரி) அதிகார வரம்பிற்கு உட்பட்ட பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை (5ம் தேதி) செயல்படும்.

பாஸ்போர்ட் பயன்பாடு உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை மற்றும் புதுவையில் உள்ள 4 சேவை மையங்களிலும் இந்த சிறப்பு பிரசாரத்தின் கீழ் 1400 பாஸ்போர்ட்டுகள் கையாள உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தநிலையில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் “வளர்ச்சியடைந்த தேசத்திற்கு ஊழல் இல்லாத இந்தியா” என்பதை மையமாக வைத்து கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் வரவேற்று பேசினார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி தலைமை தாங்கி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு விஜிலென்ஸ் விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.


Tags : Passport Office ,Puduwai, Chennai ,Zonal Officer ,Goventhan , Passport Office at Puduwai, Chennai will be open on 5th: Zonal Officer Goventhan announced
× RELATED சென்னையில் உள்ள 4 பாஸ்போர்ட்...