காஷ்மீரில் ஆப்பிள் விலை 30% சரிவு

புதுடெல்லி: நாட்டின் மொத்த ஆப்பிள் உற்பத்தியில் 75 சதவீதம் ஜம்மு காஷ்மீரில் விளைவிக்கப்படுகிறது. இந்த யூனியன் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள ஆப்பிள் உற்பத்திமூலம் தனிநபர் வருவாயில் 8.2 சதவீத பங்களிப்பு கிடைக்கிறது. இந்நிலையில், இந்தாண்டு ஆப்பிள் விற்பனை விலை கடந்தாண்டை விட 30 சதவீதம் வரையிலும் சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி உள்ளனர். இதனை சரிக்கட்ட அரசு தலையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பதினாறு கிலோ எடை கொண்ட ஆப்பிள் பெட்டி ஒன்றுக்கு பேக்கேஜிங், சரக்கு கட்டணம், பூச்சிக்கொல்லி, உரம் என ரூ.500 வரை செலவாகும் நிலையில், ஆப்பிள் பெட்டி ஒன்று ரூ.400க்கு மட்டுமே விலை போவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: