பிஎப் ஓய்வூதிய தொகையை ரூ.2000 ஆக உயர்த்த மறுப்பு: விளக்கம் கோரும் நாடாளுமன்ற குழு

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.2000 ஆக உயர்த்த நிதியமைச்சகம் மறுத்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) பதிவு செய்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது ரூ.1000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி ரூ.2000 வழங்கும்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது. ஆனால், நிதியமைச்சகம் இதை ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து, ஒன்றிய தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள், பிஜு ஜனதா தளம் எம்பி பார்துஹரி மக்தப் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் நேற்று ஆஜராகி, ஓய்வூதிய திட்டம் மற்றும் அதன் நிதி மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறையின் ஓய்வூதியம் உயர்த்தும் பரிந்துரையை நிராகரித்தது ஏன் என்று நிதியமைச்சகத்திடன் விளக்கம் கோரப்படும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: