டெல்லியில் புதிய அமைச்சர் பதவியேற்பு

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சமூக நலத்துறை மற்றும் மாநில எஸ்சி-எஸ்டி நலத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பால் கவுதம். இவர், இந்துக்கள் சிலர் புத்த மதத்திற்கு மாறும் மதமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது, பெரும் சர்ச்சைக்குள்ளானது. பதவி பிரமாணமும், ரகிசய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்ட ஒரு அமைச்சர் எவ்வாறு இதுபோன்ற மத மாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என பாஜ பிரச்னை கிளப்பியது. இதனால், கவுதம் தனது அமைச்சர் பதவியை கடந்த மாதம் 9ம் தேதி ராஜினாமா செய்தார்.இதையடுத்து, அவர் கவனித்து வந்த துறைகளுக்கு புதிய அமைச்சராக ராஜ்குமார் ஆனந்த் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றார்.

Related Stories: