×

நிலா இல்லைனா பறந்திடுவோமா...? வியாழன் இல்லைனா பூமி வெடிச்சுடுமா...?

நாம் இந்த பூமியில் உயிர் வாழ்வதற்கு பூமியை விட பல மடங்கு சிறியளவில் இருக்கக்கூடிய நிலாவும், பூமியில் இருந்து 78 கோடி கிமீ தூரத்தில் உள்ள வியாழனும்தான் காரணம். நிலா மட்டும் இல்லையென்றால் நமது பூமி இப்ப சுத்துறதை விட இன்னும் பல மடங்கு வேகமாக சுத்த ஆரம்பிச்சுருமாம். அதேமாதிரி வியாழன் கோள் மட்டும் இல்லாம போச்சுனா நம்ம பூமியே வெடிச்சுடுமாம். அது எப்படி என்பதை பார்ப்போம்.
நிலா மட்டும் இல்லைனா, நம்ம பூமி இப்ப சுத்தறதை விட நான்கு மடங்கு வேகமாக சுத்துமாம். நம்ம சூரியக்குடும்பத்துல இருக்குற எல்லா கோள்களுக்கும் அதனுடைய எடையை பொறுத்து ஈர்ப்பு விசை இருக்கும்.

இந்த ஈர்ப்பு விசையால் அந்தந்த கோள்கள் தங்களது இடைவெளியை வைத்து மற்ற கோள்களை ஈர்த்து கொண்டிருக்கும். சூரியன் அதிக நிறை கொண்டதனால் அனைத்து கோள்களிலும் தனது ஈர்ப்பு விசையை செலுத்திக் கொண்டிருக்கும். அதுபோல நமக்கு அருகிலுள்ள சிறியதாக இருக்கும் நிலாவும் பூமியின் மீது ஈர்ப்பு விசையை செலுத்தி கொண்டே இருக்கும். இதனால் தான் நமது பூமி சுத்துற வேகம் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்ற அளவில் இருக்கிறது.

பூமி வேகமாக சுத்தினால்...:

அதேநேரம் நிலா இல்லாமல் போனால் அதனுடைய ஈர்ப்பு விசை இல்லாமல் போய், பூமி தனது கட்டுப்பாட்டை இழந்து நான்கு மடங்கு அதிகமாக சுத்த ஆரம்பித்து விடும். அப்படி பூமி சுத்தினால் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் முதல் 8 மணி நேரம் வரை குறைந்து போய்டும். மேலும் பூமி வேகமாக சுத்த ஆரம்பித்தால் காற்றடிக்கும் வேகமும் அதிகமாய் விடும். கிட்டத்தட்ட 480 கிமீ வேகத்தில் பூமி முழுக்க காற்றடிக்க ஆரம்பித்து விடும். ஒரு மிகப்பெரிய புயலின் வேகமே 210 கிமீ இருந்து 280 கிமீ வரை தான்.

பறக்க துவங்குவோம்..:

2018ல் தமிழகத்தை தாக்கிய கஜா புயலின் வேகம் 140 கிமீதான். அந்த புயலே நமது தமிழகத்தில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்ப 480 கிமீ வேகத்தில் புயல் அடித்தால் அது நமது பூமி முழுக்க எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எண்ணி பாருங்கள். இங்குள்ள மரம், செடிகளை எல்லாம் வேரோடு பிடுங்கி வீசி விடும். மண்ணோடு பதிந்துள்ள மரம், செடிகளுக்கே இந்த நிலைமைனா.. அப்ப நம்மெல்லாம்... பறந்துகிட்டுதான் இருப்போம். அதேபோல் கடலிலும் தினம், தினம் சுனாமி போல் ராட்சத அலைகள் எழுந்து கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேபோல் நிலவு தனது ஈர்ப்பு விசையை விட்டு விட்டால் கடலில் உயர் ஓதம், தாழ் ஓதம் என்ற நிலை ஏற்படவே ஏற்படாது. இப்படி கடல் மட்டும் மேலே ஏறாமல் போய் கீழேயே இருந்தால், கடல் மட்டத்தில் மேலே வாழ்ந்த பல உயிரினங்கள் அழிந்து போக வாய்ப்புள்ளது. இதுபோல் வெயில், மழை, குளிர் சீசன் மாறுவதற்கு நமது பூமி 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் இருப்பதனால்தான். ஒருவேளை நிலா தனது ஈர்ப்பு விசையை விட்டு விட்டால் நமது பூமி தனது அச்சில் இருந்து கன்னாபின்னானு சுத்த ஆரம்பித்து 23.5 டிகிரியை மாற்றி ஒரு அலைன்மென்ட்டே இல்லாமல் சுத்த ஆரம்பித்து விடும். அப்படி சுத்த ஆரம்பித்தால் நம்ம பூமியிலே இப்ப இருக்குற இடைவெளியான சீசன் இல்லாம ரொம்ப மாறுபட்டு ஏற்படும்.

மிரட்டிய விண்கல்...:

அடுத்து வியாழன் இல்லைனா நம்ம பூமி எப்படி வெடிக்கும் என்பதை பார்ப்போம்... நம்ம விண்வௌி முழுக்க பெரிய, பெரிய விண்கற்கள், பாறைகள் சுற்றி வருகின்றன. 1994வது ஆண்டு நம்ம பூமியை நோக்கி ஒரு மிகப்பெரிய விண்கல் மோத வந்தது. இதை பார்த்த விஞ்ஞானிகள், ‘இது நம்ம பூமியில கண்டிப்பா மோதத்தான் போகிறது, அப்படி மோதினால் நமது பூமியின் பெரும் பகுதி அழிந்து போயிடும்’ எனக்கூறி அச்சப்பட்டனர். ஆனால் அப்படி நடக்கவில்லை.

1,321 மடங்கு பெரியது...:

அந்த விண்கல் பூமியை நோக்கி வந்த பாதையில் வியாழனை கடக்கும் போது அதன் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு அதனுடனே சுற்றி வந்தது. நாளடைவில் வியாழனின் அதீத ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, அந்த விண்கல் வியாழன் மீதே விழுந்து வெடித்து சிதறி போனது. வியாழன் கோள் நம்ம பூமியை விட 1,321 மடங்கு பெரியது. இதனாலே அந்த விண்கல் தாக்குதலை வியாழனால் தாங்கி கொள்ள முடிந்தது. இதுவே நம்ம பூமி மேல் அந்த விண்கல் மோதியிருந்தால் கண்டிப்பாக பூமியின் பெரும் பகுதி அழிந்து போயிருக்கும். நம்ம பூமிக்கு அடுத்தது செவ்வாய் கோளும், அதற்கு அடுத்தபடியாக வியாழன் கோள் உள்ளது. இந்த செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையே பெரிய, பெரிய விண்கற்கள் மில்லியன் கணக்கில் சுற்றி வருகிறது.

நிலாவில் பள்ளம்...:

இதில் ஒவ்வொரு விண்கல்லும் 100 கிமீ சுற்றளவு கொண்டதாக கூட இருக்கும். இந்த விண்கற்களை எல்லாம் வியாழன் தனது அதீத ஈர்ப்பு விசையால் தன்னை சுற்றி வருமாறு ஈர்த்து வைத்துள்ளது. திடீர்னு வியாழன் மறைந்து போய் விட்டால் விண்கற்கள் மீது செலுத்தி வந்த ஈர்ப்புத்தன்மை போய் விடும். அப்படி நடந்தால் விண்கற்கள் ரொம்ப வேகமாக சூரியனின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு வரும். அப்போது வழியில் உள்ள நமது பூமி மீது பெரும்பாலான விண்கற்கள் மோதும்.

இது மட்டும் நடந்தால் நமது பூமியே வெடித்து சிதறுவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. வியாழன் கோள் அந்த இடத்தில் இருக்கிறதனால்தான் இது நிகழாமல் நமது பூமி பாதுகாப்பான முறையில் உள்ளது. அதுபோல நாம் நிலாவை கேமராவில் நன்கு ஜூம் செய்து பார்த்தால் அதன் மேற்பரப்பில் சில, சில பள்ளங்கள் தெரியும். அது எல்லாமே விண்கற்கள் மோதிய பள்ளங்கள்தான். இப்படி வந்த பல விண்கற்கள் நம்ம பூமி மீது மோத வேண்டியதுதான்.

இதைத்தான் தன் மீது வாங்கி நிலா தடுத்து பூமியை காப்பாற்றியிருக்கிறது. அதேமாதிரி சில நேரம் வியாழனின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பித்து பெரிய, பெரிய விண்கற்கள் நமது பூமியை நோக்கி வரும். அதை எல்லாம் செவ்வாய் கோள் தான் மேல் வாங்கி பூமியை காப்பாற்றியிருக்கிறது. இப்படித்தான் நாம் பூமியில் வாழ்வதற்கு மற்ற கோள்களும் சேர்ந்து வேலை செய்கிறது. நமது பூமியை நோக்கி 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய விண்கல் வந்தது. இந்த விண்கல் எந்த கோள்களின் ஈர்ப்பு விசையிலும் சிக்காமல் நமது பூமி மீது மோதியது.

அந்த விளைவால்தான் நமது பூமியில் வாழ்ந்த டைனோசர் இனம் அழிந்து போய் விட்டது என சொல்கிறார்கள். இதேபோல் இப்படி ஒரு பேரழிவு நடக்கவே நடக்காது நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அந்த மாதிரி விண்கல் நம்ம பூமியை நோக்கி வந்தால் நம்மை காப்பாற்றுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பை நம்மை சுற்றியுள்ள வியாழன், செவ்வாய், நிலா கொடுத்து கொண்டுதான் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Tags : earth , Moon, Jupiter, Earth
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்