நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ.11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ.11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 18ம் தேதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு நவ.11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories: