×

தேசிய ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணியில் 27 ஊட்டி மாணவர்கள்

ஊட்டி: தேசிய அளவில் நடந்த ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணியில் ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளி மாணவர்கள் 27 பேர் பங்கேற்றனர். டில்லி ஐசிஎஸ்இ சார்பில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்தது. 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 14 வயது பிரிவில் இறுதி போட்டிக்கு தேர்வாகி, பஞ்சாப் அணியுடன் மோதியது.
இதில், 5-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியில் இடம் பெற்ற 18 பேரில், 13 மாணவர்கள் ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்.

அதேபோல், 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளியை சேர்ந்த மாணவர்களே அதிகளவில் பங்கேற்றனர். இந்த அணி இந்திய அளவில் 2ம் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ேகாப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேசிய அளவில் நடந்த போட்டிகளில் ஊட்டி கிரசன்ட் கேசில் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாடு அணி பிரிவில் 27 பேர் பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அணியில் இடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு ஹாக்கி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Tamil ,Nadu , 27 Ooty students in the Tamil Nadu team in the national hockey tournament
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...