×

32 ராட்சத தூண்கள் பொருத்தப்படுகிறது: தூத்துக்குடி துறைமுக சாலையில் மேம்பால பணிகள் துவக்கம்: 10 நாள் போக்குவரத்து மாற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகம், ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தூண்களை பாலத்தின் மீது நிறுவும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. இதையடுத்து துறைமுக சாலையில் நேற்று முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுகம், ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. 2023 பிப்ரவரியில் இப்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் 32 ராட்சத கான்கீரிட் தூண்கள் பொருத்தும் பணி, நேற்று (2ம் தேதி) முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் 5 நாட்கள், பாலத்தின் வடக்கு புறத்தில் வேலைகள் துவங்கியது. இதற்காக மிகப்பெரிய அளவில் தயார் நிலையிலுள்ள கான்கிரீட் தூண்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் தூக்கி பாலத்தின் மீது பொருத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம் அடைந்துள்ளனர். பாலம் பணிகள் துவங்கி நடைபெறுவதால் பாலத்தின் வடக்கு பகுதியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இருந்து வரும் ரயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி வரை காமராஜ் கல்லூரி சாலை வழியாக திருச்செந்தூர் ரவுண்டானா (பாலம் கட்டப்படும் இடத்திற்கு) வரும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு ரோச் பூங்கா வழியாக துறைமுக சபை விருந்தினர் விடுதி, ஸ்பிக், டாக் இணைப்பு சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலைக்கு செல்ல வேண்டும்.

மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வஉசி துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டின் வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது. திருச்செந்தூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் (மதுரை மற்றும் நெல்லை சாலை செல்லும் வாகனங்கள்) பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஏற்கனவே உள்ள சர்வீஸ் ரோடு சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். திருச்செந்தூரில் இருந்து வஉசி துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள், ஸ்பிக், டாக் துறைமுக சபை விருந்தினர் இல்லம் வழியாக செல்ல வேண்டும்.

இதையடுத்து பாலத்தின் தெற்கு பகுதியில் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ராட்சத கான்கீரிட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும். அப்போது திருச்செந்தூரில் இருந்து வஉசி துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள் ஸ்பிக், டாக் துறைமுக சபை விருந்தினர் இல்லம் வழியாக செல்ல வேண்டும். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பகுதியில் இருந்து ரயில்வே மேம்பாலம் வழியாக திருச்செந்தூர் சாலை ரவுண்டானா வரும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு, ரோச் பூங்கா வழியாக துறைமுகசபை விருந்தினர் விடுதி, ஸ்பிக், டாக் இணைப்புச் சாலை வழியாக செல்லலாம். தூத்துக்குடி வஉசி துறைமுக சபையில் இருந்து பாலத்தினை கடந்து செல்ல வரும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் வடக்கு புறத்தை பயன்படுத்தி மதுரை மற்றும் நெல்லை சாலைக்கு செல்லலாம்.

மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வஉசி துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் பாலத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டினை பயன்படுத்தி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் (மதுரை மற்றும் நெல்லை மார்க்கமாக செல்லும் வாகனங்கள்) பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஏற்கனவே உள்ள சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். மேம்பாலம் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டும் நிலையில் உள்ளது.

Tags : Tuticorin Harbor Road , Installation of 32 Giant Pillars: Flyover work begins on Tuticorin Harbor Road: 10-day traffic diversion
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு