குஜராத் சட்டப்பேரவைக்கு டிச 1 மற்றும் 5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல்

டெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1, 5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும். முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு நவ.5ம் தேதி தொடங்குகிறது. சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிச.8ம் தேதி எண்ணப்படும். குஜராத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக மொத்தம் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்தும் தரத்தலத்திலேயே அமைக்கப்படும் என்றும் கூறினார்.  

Related Stories: