தொடர் கனமழை காரணமாக சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

விருதுநகர்: சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நவம்பர் 9ம் தேதி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குதொடர்ச்சிமலைப்பகுதியில் அமைத்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், மாதம் 8 நாட்களில் (பிரதோஷம் மற்றும் பெளர்ணமி உள்ளிட்ட நாட்களில்) பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வரும் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓடைகளின் பல்வேறு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் யாரும் வரவேண்டாம் எனவும் ஆற்றுப்பகுதியில் யாரும் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: