×

காவிரிநீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: காவிரிநீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி நீர்வரத்து 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20,000 கனஅடியாக அதிகரித்திருக்கிறது.

காவிரிநீர்பிடிப்பு பகுதி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக அதிகரித்து தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20,000 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்க வாய்ப்புள்ளது.

Tags : Ogenacal , Due to continuous heavy rains in the Cauvery catchment area, there is an increase in water flow to Okanagan
× RELATED ஒகேனக்கல்லில் சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை போக்குவரத்து ஸ்தம்பிப்பு