×

ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சை: மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா தஞ்சாவூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, நேற்று தொடங்கிய இந்நிகழ்வில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
 
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து திருமுறைகள் பாடப்பட்டு மங்கள வாத்தியங்கள்,கைலாய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து மாமனார் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது , தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,  தர்மபுரம் ஆதீனம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாமன்னர் ராஜராஜ சோழன் போற்றி பாதுகாத்த திருமுறை வீதி உலா ராஜ வீதிகளில் நடைபெற உள்ளது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து ராஜராஜ சோழனால் பாதுகாக்கப்பட்ட திருமுறைகள் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு யானை மீது ஊர்வலமாக வரப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து பெரியநாயகி மற்றும் பெருவுடையாருக்கு பேராபிஷேகங்கள் நடைபெறுகின்றன மாலை 3 மணி முதல் மேடை நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன .பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

சதய விழா கொண்டாடப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ராஜராஜ சோழன் சிலை அமைந்துள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஒரு வழி சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Thanjay ,District ,Ruler ,Dinesh Ponraj Oliver ,Rajaraja Choshan , Thanjavur District Collector Dinesh Ponraj Oliver garlanded the statue of Rajaraja Cholan on the occasion of his 1037th death anniversary.
× RELATED கட்சி கட்டுப்பாட்டை மீறி...