×

அதிகரிக்கும் பூமியின் வெப்பநிலை!: 28 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் முற்றாக உருகும்.. யுனேஸ்கோ அமைப்பு எச்சரிக்கை..!!

ஜெனிவா: பூமியின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அடுத்த 28 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் முற்றாக கரைந்துபோகும் என்று யுனேஸ்கோ அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனேஸ்கோ, உலகம் முழுவதும் உள்ள 18 ஆயிரத்து 600 பனிப்பாறைகளை ஆய்வு செய்தது. இதில் யுனேஸ்கோ அமைப்பால் பாரம்பரிய பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 50 இடங்களில் உள்ள பனிப்பாறைகளும் அடங்கும். பூமியின் வெப்பநிலை எப்படி இருந்தாலும் 18 ஆயிரத்து 600 பாறைகளில் 3ல் ஒரு பங்கு காணாமல் போகும் என்று யுனேஸ்கோ அறிக்கை கூறியுள்ளது.

இவற்றில் இத்தாலியில் உள்ள டோலோமைட்ஸ், அமெரிக்காவில் உள்ள யோஸ்மைட், யெல்லோஸ்டோஸ், ருவன்ஸோரி மற்றும் தான்சானியாவில் உள்ள மவுண்ட் கிளிமஞ்சாரோ ஆகியவை அடக்கம். உலகில் மீதமுள்ள பனிப்பாறைகளை காப்பாற்ற வேண்டுமாயின் புவி வெப்பநிலை அதிகரிப்பை ஒன்றரை டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று யுனேஸ்கோ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2100ம் ஆண்டு 9,300 பனிப்பாறைகள் உருகிவிடும் என்றும் இதனால் கரைகளில் அரிப்பு ஏற்பட்டு கடல்மட்டம் மேலும் 5 சதவீதம் உயரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சூறாவளிகள், புயல்கள், சுனாமிகள் அதிக எண்ணிக்கையில் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Tags : Earth ,UNESCO , Earth temperature, glaciers, UNESCO organization
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...