சிஆர்பிஎப் ஐஜி.யாக 2 பெண்கள் நியமனம்

புதுடெல்லி : ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் அதிகாரிகள், பைலட்டுகள் உள்பட பல பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், சிஆர்பிஎப்.பில் ஆனி ஆபிரகாம், சீமா துண்டியா என்ற 2 பெண் அதிகாரிகள் ஐஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிஆர்பிஎப்.பில் ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் 3 பேர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இருந்த போதிலும் முதல்முறையாக  ஆனி ஆபிரகாம், சீமா துண்டியா ஆகியோர்  ஐஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கலவர தடுப்பு படைக்கு (ஆர்ஏஎப்) ஆனியும், பீகார் பிரிவுக்கு சீமாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த 2 அதிகாரிகளும் சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர்.

Related Stories: