சீன அதிபருடன் ஷெபாஸ் பேச்சு

பீஜிங் :   இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பை வலுத்தப்படுத்த தங்கள் நாட்டுக்கு வரும்படி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு சீனா அழைப்பு விடுத்தது. இதை ஏற்று நேற்று முன்தினம் இரவு  2 நாள் பயணமாக அவர் சீனா சென்றார். தலைநகர் பீஜிங்கில் சீன அதிபர் ஜின்பிங்கை ஷெரீப் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பலப்படுத்துவது குறித்தும், ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் கோடி மதிப்பு சீனா-பாக். பொருளாதார திட்டம் குறித்தும் இருவரும் பேசினர். சீன அதிபராக ஜின்பிங்  3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டு தலைவர் ஷெபாஸ்  ஷெரீப்தான். சீன பிரதமர் லீ கேகியாங்கையும் அவர் சந்தித்து பேசுகிறார்.  கஷ்கருடன், பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரையிலான சாலை திட்டம் குறித்த பேச்சுவார்த்தையையும் அவர் நடத்துகிறார்.

Related Stories: