சிதம்பரம் நடராஜர் கோயில் யாருக்கு சொந்தம்?ஆவணம் அளிக்க தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்என்று தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது். இது குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிகையில் கூறப்பட்டுள்ளதாவது, சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அறநிலைய துறையின் குழுக்கள் செல்லும் போது, கோயில் நிர்வாகம்  தீட்சிதர்களால் முறையாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், இந்திய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட உரிமையின் படி நடைபெற்று வருவதாக தங்களாலும், தங்கள் வழக்கறிஞர் மூலம் ஊடகங்களில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இது போன்ற பதில் உங்களிடம் இருந்து தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்த ஆவணங்களின் நகல்களை அறநிலையதுறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது எனவும், நிர்வாகத்தில் அறநிலைய துறை தலையிட கூடது என்று நீதி மன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நகல். இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொருந்தாது என நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நகல்.

கோயில் தீட்சிதர்கள் சொந்த நிதியில் இருந்து கோயில் பராமரிக்கப்படுவதற்கான ஆதாரங்கள். சொந்த நிதியில் இருந்து தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள். கோயில் அமைந்துள்ள இடத்தின் நில உரிமை குறித்த வருவாய்த்துறை ஆவணங்கள். நில உரிமை இறைவன் பெயரில் இருப்பின் அது மன்னர்களால்-அரசர்களால் இறைவனுக்கு வழங்கப்பட்டதா அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வாங்கப்பட்டதா என்பதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட விவரங்களை இந்த மாதம் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தவறினால் அறநிலைய கொடைகள் சட்டம் மற்றும் அதன் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: