×

மோசமான வானிலை காரணமாக அந்தமான் செல்லும் 14 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 7 விமானங்கள் அந்தமானுக்கு புறப்பட்டுச் செல்கின்றன. அதேபோல் அந்தமானில் இருந்து 7 விமானங்கள் சென்னைக்கு இயக்கப்படுவது வழக்கம். எனினும், அந்தமான் கடற்பகுதியில் மாலை 3 மணியில் இருந்து தரைக்காற்று வீசுவதால், அங்கு விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமாகும் நிலை ஏற்பட்டது.

இதனால் அந்தமான் விமான நிலையத்தில் அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் நடைபெற்றுவருகிறது. மாலை, இரவு நேரங்களில் விமான சேவைகள் இல்லை. கடந்த சிலநாட்களாக, வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, நேற்றுமுதல் அந்தமானில் மோசமான வானிலை நிலவுகிறது. மேலும், அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

நேற்று காலை முதல் வரும் 4ம் தேதிவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு செல்லும் 7 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், அந்தமானில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் 5ம் தேதி முதல் அந்தமானுக்கு விமான சேவைகள் துவங்கும்.


Tags : Andaman , Bad weather, Andaman, 14 flights, cancelled
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...