×

மயிலாடுதுறை அருகே வயல்களில் கடல்நீர் புகுந்து 500 ஏக்கர் சம்பா பயிர் நாசம்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை அருகே வயல்களில் கடல் நீர் புகுந்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. நாகப்பட்டினம் மாவட்டம்  வேதாரண்யம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு தூறல் மழை பெய்தது. காரைக்கால்  பகுதியில் சாரல் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில்  பலத்த மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில்  நேற்றுமுன்தினம் இரவு விட்டு விட்டு மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டம்  பட்டுக்கோட்டை பகுதியிலும் சாரல் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல்  அலை தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள பழைய அஸ்திவார தடுப்பு சுவர் தாண்டி  எழுந்தது. கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி குட்டியாண்டியூர், சந்திரபாடி  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் படகுகளையும், வலை  மற்றும் மீன் பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக தரங்கம்பாடி  துறைமுகத்திலும், மற்ற மீனவர்கள் அந்தந்த பகுதிகளிலும் வைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சின்னங்குடி, சின்னமேடு,   உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்யபட்டிருந்தது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கடல்நீர் அம்மனாற்று வழியாக வடிகால் வாய்க்கால்கள் மூலம் நெல் சாகுபடி செய்யபட்ட வயல்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.


Tags : Mayiladuthurai , Mayiladuthurai, field, seawater, 500 acres of Samba, crop damage
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...