உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்புக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் ஓய்வு பெறுவதையொட்டி, அடுத்ததாக 50வது புதிய தலைமை நீதிபதி சந்திரசூட், வரும் 9ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்கக்கோரி, முர்சலின் அசிஜித் ஷேக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். சந்திரசூட் 2 ஆண்டுகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். அவர் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஓய்வு பெறுவார்.

Related Stories: