சென்னை: இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த 2018ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘அந்தாதூன்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம், ‘அந்தகன்’. நடிகர் தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். மிகவும் வித்தியாசமான கேரக்டரில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, மனோபாலா நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வாங்கியுள்ளார்.