மக்களை பாதிக்காத, புதிய வாழ்வை மேம்படுத்தும் வகையில் பரந்தூர் மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

சென்னை: புதிதாக அமையவுள்ள விமானநிலையத் திட்டத்திற்காக பரந்தூர் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். சென்னை, அண்ணாசலையில் உள்ள தனியார் உணவக விடுதியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபையும் இணைந்து ‘‘பசுமை விமான நிலையம் - தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்கு தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிருப்பதாவது, ‘‘பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது என்பது திடீரென எடுத்த முடிவு கிடையாது. 11 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பின்னர் 4 இடங்களை தேர்வு செய்து அதன் பிறகு இறுதியாக பரந்தூர் இடம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல், புதிய விமான நிலையம் அமையும் போது அதிகளவில் ஏற்றுமதி நடைபெறும் விமான நிலையமாக திகழும். மேலும், சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்க செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தமிழக முதல்வரும் ஒருபுறம் பொருளாதார வளர்ச்சியும் இருந்தாலும், அப்பகுதி மக்களின் நலன் சார்ந்து அவர்களை பாதிக்காத வகையில் புதிய வாழ்வை மேம்படுத்தும் வகையிலும், வசதிகளை செய்துகொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல், பரந்தூர் கிராம மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

Related Stories: