தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட 10,000 போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

சென்னை: தேவர் ஜெயந்தி விழாவில் சிறு மோதல் சம்பவங்கள் கூட இல்லாமல் சிறப்பாக பாதுகாப்பு பணி மேற்கொண்ட 10 ஆயிரம் போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தேவர் ஜெயந்தி விழா கடந்த 30ம் தேதி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் மேற்பார்வையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், 24 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 10 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒரு சிறு மோதல் சம்பவம் கூட ஏற்படா வண்ணம் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்.

உங்களது இந்த சாதனையின் மூலம் நமது தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள். பாதுகாப்பு பணியில் நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக இருந்துள்ளீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்காகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இப்பணியில் கடமையாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், காவல்ர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கடமையாற்ற வாழ்த்துக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: