×

மேற்குவங்க முதலமைச்சர் தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மேற்குவங்க முதலமைச்சர் தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, தேர்தல் குறித்து எதுவும் எதுவும் பேசவில்லை என செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வங்க மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். 2 நாள் பயணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் வரவேற்றனர்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். மம்தா பானர்ஜியை வாசலுக்கு வந்து முதல்வர் வரவேற்றார்.

கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் மம்தா வழங்கினார். இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: மேற்குவங்க முதலமைச்சர் தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, தேர்தல் குறித்து எதுவும் எதுவும் பேசவில்லை என்று கூறினார். மேலும் மேற்குவங்கத்திற்கு விருந்தினராக வர வேண்டும் என அழைத்ததாகவும் கூறினார்.

மம்தா பானர்ஜி கூறுகையில்  ஸ்டாலின் எனது சகோதரரைப் போன்றவர், அவரை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டு செல்வேன் நாங்கள் அரசியல் குறித்தோ, ஆளுநர்கள் குறித்தோ நாங்கள்  எதுவும் பேசவில்லை என்று அவர் கூறினார்.


Tags : Chief Minister ,West ,Minister ,K. Stalin , West Bengal Chief Minister, Honorary Meeting, Chief Minister M.K.Stalin
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...