இந்தியாவில் செப்டம்பரில் மட்டும் 26 லட்சம் வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்

புதுடெல்லி: வாட்ஸ் அப்-பில் இருந்து, கடந்த செப்டம்பரில் மட்டும் இந்தியாவில் 26 லட்சத்துக்கும் அதிகமான போலிக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. ‘மெட்டா’ நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப்பில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமான மோசடி செய்யும் கணக்குகள் முடக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் திருத்தப்பட்ட புதிய ஐடி விதிகளின் கீழ், மேலும் 26.85 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டது.

 இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்:

வாட்ஸ்அப் பயனர்களிடமிருந்து பெற்றப்பட்ட நெகடிவ் பின்னூட்டம், ஸ்பேம், தேவையில்லாத விளம்பரங்கள், மோசடி புகார்கள் மற்றும் ஆபாச செய்திகள் புகைப்படங்கள் அனுப்பும் கணக்குள், பயனர்கள் ப்ளாக் செய்த கம்பெனி விளம்பர கணக்குகளை தடை செய்துள்ளோம். இவை அனைத்து திருத்தப்பட்ட ஐடி விதிகளின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: