அரியபுரத்தில் இரு தெருவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரியபுரம் கிராமத்தில் இரண்டு தெருக்களில் ஒரே நாளில் திருவிழா நடைபெற்றது. இன்று பிற்பகல் திருவிழா நிறைவு பெற்ற நிலையில் ஒரு தெருவை சேர்ந்த சிலர் மற்றொரு தெருவில் வெடி வெடித்தும், வேறு பகுதியில் உள்ள சில பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், சேதப்படுத்தியவர்களிடம்  கேட்டதற்கு  அவர்களை கற்களால் தாக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: