×

‘ஆவின் டிலைட்’ எனும் ‘பசும் பால்’ 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிர்வாகம் சார்பில் அறிமுகம்!

சென்னை: சென்னை : 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும் பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அமைச்சர் சா.மு.நாசர் அறிமுகப்படுத்தினார். தமிழகம் முழுவது 1.5 கோடிக்குமேல் நுகர்வோர்களை கொண்ண்ட ஆவின் நிறுவனம், 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 235 க்கும் மேற்பட்ட பால் உப பொருட்களை சந்தைபடுத்திவரும் ஆவின் நிறுவனம்  பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப, சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா) மற்றும் டீமேட் (சிவப்பு) போன்ற பால் வகைகளை அறிமுகப்படுத்தி நாளொன்றுக்கு சுமார் 30 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யது வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு இனிப்புகளை அறிமுகப்படுத்தி, பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ஆவின் டிலைட் பசும்பால் அரை லிட்டர் பேக்கிங்கில்  (500 ML) புதிய வடிவத்தில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்களால்  வெளியிடப்பட்டுள்ளது. ஆவின் டிலைட் 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் (SNF) கொண்ட பால் ஆகும். இப்பாலினை 90 நாட்கள் வரை எவ்வித குளிர்சாதன வசதியின்றி வைத்து பயன்படுத்தலாம். எவ்வித வேதி பொருட்களும்   சேர்க்கபடாமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயனங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததாகும்.

எதிர் வரும் மழைக்காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைத்திட ஆவின் டிலைட் மிகப்பெரிய பங்காற்றும் எனக் கருதப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் வரை பேக் செய்யும் திறன் கொண்ட சென்னை சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மில்லி பேக்கெட்டுகளில் மீண்டும் தயார் செய்து அதிகபட்ச சில்லறை விலை ரூ.30 க்கு வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Aavin , The management of Aavin has introduced 'Aavin Delight' as a way to keep cow's milk for up to 3 months!
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...