×

டி20 உலகக்கோப்பை: இந்தியா - வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை; மழை குறுக்கிட்டு போட்டி ரத்தானால் இந்தியாவுக்கு நெருக்கடி

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்தியா - வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கிறது. இந்த போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 3வது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்விடைந்து புள்ளிபட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதேபோல் வங்கதேச அணியும் 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்திய அணி தற்போது எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்படும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். அப்படி நடந்தால் இரு அணிகளும் 5 புள்ளிகளுடன் மீண்டும் சமநிலை அடையும்.

இதனால் இரு அணிகளும் மற்ற அணிகளின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனினும் இந்திய அணியின் ரன்ரேட் (+0.844) நல்ல நிலையில் உள்ளதால் வங்கதேச அணியை (-1.533) விட இந்திய அணிக்கே அரையிறுதிக்குள் நுழைய அதிக வாய்ப்பாக அமையும்.


Tags : T20 World Cup ,India ,Bangladesh , T20 World Cup: India-Bangladesh Teams Test Today; Interrupted by the rain A crisis for India if competition fades
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...