×

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக அறிவிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல், 100 கனஅடி நீர் வெளியேற்றப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,180 கனஅடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி இன்று 3 மணியளவில் முதற்கட்டமாக 100 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதுவரை 75% நீர் இருப்பு உள்ளது. மேலும் கனமழை காரணமாக நீர் நிரம்பிக்கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக நீர் திறக்கப்பட உள்ளது.

இன்று காலை நிலவரப்படி 1,180 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடி நீரில், 2,765 கனஅடி நீர் இருந்து வருகிறது. தொடர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக உபரி நீர் திறப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புழல் ஏரிக்கு தொடர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணாமாக இன்று பிற்பகல் 3 மணியளவில் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றான புழல் ஏரிக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று பிற்பகல் 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sembarambakkam , 100 cubic feet of water released from Puzhal Lake, Sembarambakkam today afternoon: Flood warning issued for coastal residents
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...