வடகிழக்கு பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை; பேரிடர் மீட்பு படை தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தெரிவித்துள்ளார். பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பருவமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். வடசென்னை தாழ்வான பகுதி என்பதால் மழை பாதிப்பு வழக்கமாக உள்ளது, இருப்பினும் நீரை அகற்றும் பணி துரிதமாக நடக்கிறது என்று தெரிவித்தார்.

Related Stories: