×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,375 பேர் பலியா?.. ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம்..!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,190 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,54,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 1,375 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,30452 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் விடுபட்ட உயிரிழப்புகளை இணைக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,41,09,133 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 16,243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 2,19,66,16,12 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,23,859 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : India ,Union Health Ministry , India has lost 1,375 people due to Corona in the last 24 hours? Union Health Ministry explained..!
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...