செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து பிற்பகல், 100 கனஅடி நீர் வெளியேற்றப்படும்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல், 100 கனஅடி நீர் வெளியேற்றப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,180 கனஅடியாக உள்ளது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புழல் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: