அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர்  ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (02-11-2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02-11-2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் இன்று (02-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: